ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் பிரத்தியேக ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் (JioInteract) என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட்

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலிகள் மற்றும் பயன்களை தருகின்ற பொருட்களுக்கு மிகுந்த தேவை ஏற்படும் என்பதனால் ஜியோ நிறுவனம், பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள இன்ட்ராக்ட் சேவையில் முதற்கட்டமாக  இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய முடியும். இவர் நடிதந்துள்ள காமெடி அம்சத்தை பெற்ற 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்ரப்படுத்துவார் என ஜியோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையிலான இன்டெராக்ட் தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த வீடியோ அழைப்புகள் உயர்தர ஹெச்டி தரத்தில் வழங்கப்படுகின்றது.

மே 4, 2018 முதல் ஜியோ இன்டெராக்ட் சேவையை கொண்டு ஜியோ மற்றும் இதர ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அமிதாப் பச்சனுக்கு வீடியோ கால் மேற்கொள்ள முடியும். வீடியோ கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் 102 நாட் அவுட் திரைப்படம் குறித்த தகவல்களை கேட்டறிந்து கொண்டு, திரைப்படத்திற்கான டிக்கெட்களை புக்மைஷோ மூலம் முன்பதிவும் செய்ய முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் செயிலி கொண்டு VCBaaS (Video Call Bot as a Service) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நுட்பம் வாயிலாக செயற்கை நுண்ணறிவு மற்றும் வீடியோ அழைப்பு தொழிற்நுட்பம் எளிமைபடுத்தப்பட்டு , பிராண்டினை பிரபலப்படுத்த இன்ட்ராகட் வழிவகுக்கும்.

ஜியோ இன்டெராக்ட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

1 . முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் மைஜியோ (MyJio) செயலியை டவுன்லோடு செய்யவும்.

2. மைஜியோ செயலியில் காணப்படும் ஜியோ இன்டெராக்ட் சேவையை கிளிக் செய்யவும்.

3. அடுத்து வீடியோ கால் துவங்கி அமிதாப் பச்சனுடன் உரையாடலாம்.

4. கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ கால் அனுபவத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஷேர் செய்வதற்கான ஆப்ஷன் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்

வரும் வாரங்களில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால் சென்டர்கள், வீடியோ கேடேலாக், விர்ச்சுவல் ஷோரூம்கள், பொருட்களின் ஷோரூம், இ-காமர்ஸ் தள பயன்பாடு உள்ளிட்டவற்றை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.6 கோடி வாடிக்கையாளர்களில், சுமார் 15 கோடிக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த வசதியை பெறுவார்கள் என ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்