அதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..!

விவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறைந்த விலையில் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு கட்டணமில்லை என பல்வேறு சிறப்பு  சலுகைகளுடன் வெளியான ஜியோ பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை சந்தையிலிருந்து வெளியேற்றியது. ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. குறிப்பாக ஏர்டெல் மட்டும் சமாளித்து மீள துவங்கியுள்ள நிலையில், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் தொடர்ந்து போராடி வருகின்றன. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி உரிமத்தை வழங்குவதில் அரசு தாமதப்படுத்துவதாக ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

ஜியோ சிம் புறக்கணிப்பு

பஞ்சாப், ஹரியானா என நாட்டின் அதிகம் விவசாயிகளை கொண்ட மாநிலங்களில் ஜியோ சிம் மீதான வெறுப்பு பரவ துவங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் லட்சகணக்கானோர் மொபைல் நெம்பர் போர்ட் விண்ணப்பத்தை கோரியுள்ளதாக சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையிலே போர்ட் செய்யப்படுவதாக தெரிகின்றது.

ஜியோ நெட்வொர்க்கிலிருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு போர்ட் செய்பவர்கள் பெரும்பாலும் 4ஜி சேவையை நாடுவதனால் ஏர்டெல் பெரும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிகின்றது. இதற்கு அடுத்தப்படியாக வி நிறுவனம் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்றிருக்கலாம்.

ஜியோ MNP செய்வது எப்படி ?

ஜியோ மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் இருந்து மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்துக்கு மாற MNP என்ற வசதி வழங்கப்படுகின்றது.

படி 1 – PORT<Space> mobile number என டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்களுக்கு போர்ட்டிற்கு அனுமதி வழங்கும் UPC எண் கிடைக்கப் பெறும்.

படி 2 – கிடைத்த UPC எண் கொண்டு அருகாமையில் உள்ள விருப்பமான டெலிகாம் ரீடெயிலரை தொடர்பு கொள்ளவும்.

படி 3- போர்ட் விண்ணப்பம் கோரிய 5 முதல் 7 நாட்களுக்குள் உங்களுடைய புதிய நெட்வொர்க் சேவை கிடைக்க துவங்கும். ஜம்மூ மற்றும் காஷ்மீர், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 15 நாட்கள் தேவைப்படும்.

குறிப்பு UPC எண் வேலிடிட்டி நான்கு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் கார்டினை பயன்படுத்தினால் விரைவாக பணிகள் நிறைவடைகின்றது.