15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்

இந்தியாவின் முன்னணி 4ஜி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 15,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை நடப்பு நிதியாண்டில் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுனத்தின் அதிரடியான ஆஃபர்கள் மற்றும் டேட்டா சலுகைகள் காரணம் என தெரியவந்துள்ளது.

ஜியோவின் மிக முக்கியமான குறைந்த விலையில் தொலைப்பேசி அழைப்பு, டேட்டா பெற்று பயனடைந்து வருகின்றனர். குறைந்த விலை சலுகையின் காரணமாக பயனாளர்கள் மிகப்பெரிய நன்மை அடைந்தாலும் ஜியோ நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கலாம் என கருதப்படுகின்றது.

வரும், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிற நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும் எனப் பிரபல முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பெர்ன்ஸ்டெய்ன் கணித்துள்ளது.

15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்

இந்த நிதி ஆண்டில் மட்டும் ஜியோவின் மொத்த முதலீட்டு தொகையில் 3.1 சதவீத லாபம் கிடைத்துள்ளது. இதனால், ஜியோவுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் ரூ. 15000 கோடி வரை நிதி குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வழங்குகின்ற குறைந்த விலை ஜியோ போன் சலுகைகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடெயில் பெயரில் விற்பனை செய்ப்படுகின்றது.

நடந்து முடிந்த மூன்றாவது நிதி காலாண்டில் ஜியோ 830 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டாலும், மறைமுக செலவு கணக்கில் இழப்புத் தொகை 3,800 கோடி ரூபாயாக இருக்கலாம், இதே காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கான இழப்பு 630 கோடி ரூபாயாகவும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இழப்பு 4,430 கோடி ரூபாயாகும்.