ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனக்கு சொந்தமான ஜியோ 5ஜி மொபைல் உடன் கூடிய பன்டில் ஆஃபருடன் 5ஜி சேவையை ஏப்ரல் 2020 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜியோவின் 5G சேவையில் உயர்வேக டேட்டா அனுபவத்தை வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி
கடந்த செப்டம்பர் 2016 முதல் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சேவையின் மூலம் டெலிகாம் துறையில் நுழைந்து பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மிக கடுமையான டேட்டா விலை குறைப்பு மற்றும் வரம்பற்ற அழைப்பு முறையின் காரணமாக சுமார் 28 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி சேவை வழங்குநராக விளங்கி வருகின்றது.
சிறப்பான 5ஜி சேவை தொடர்பான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறைந்த விலை 5ஜி மொபைல் போன்ற காரணங்களை மேம்படுத்திய பிறகு 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்க உள்ளது. ஐந்தாவது தலைமுறை தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம், இந்த வருடத்தின் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க ஏப்ரல் 2020 முதல் திட்டமிட்டுள்ளது.
டெலிகோ நிறுவனங்களின் 5ஜி உள் கட்டமைப்பு மேம்படுத்த ஜூலை மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளது. எனவே, முறையான சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜியோவின் 5ஜி தொடங்கலாம்.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்
ஜியோ டெலிகாம் நிறுவனம், 5ஜி மொபைல் போன் தயாரிப்பிற்கு பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தையை ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியுள்ளது. இதன் மூலம் உயர்வேக இணைய சேவையை ஜியோ வழங்க உள்ளது.
தற்சமயம் 4ஜி சேவையில் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 என இரு ஃபீச்சர் ரக மொபைல் போன்கள் சந்தையில் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருப்பதனை போல, 5ஜி மொபைல் போன்களுடன் கூடிய பல்வேறு டேட்டா சலுகை உட்பட இது தொடர்பான நன்மைகளை வழங்க உள்ளதாக Financial Chronicle பத்திரிக்கை மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
5G அலைக்கற்றை தொடர்பான ஏலம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் முதற்கட்ட சோதனை ஓட்டத்தை ஜியோ தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து ஜியோ 5ஜி அதிகார்வப்பூர்வமான சேவை ஏப்ரல் முதல் தொடங்கலாம்.