ரூ.222, ரூ.333, ரூ.444 மற்றும் ரூ.555 என மொத்தம் நான்கு ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று பிளான்களின் நோக்கம் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மற்றும் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடங்கள் வரை பேசலாம்.
சமீபத்தில் இந்நிறுவனம் ஐயூசி காலிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதாவது மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்கும்போது நிமிடத்திற்கு 6 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக, ஜியோவின் திட்டங்களில் ரூ.10 முதல் 1000 வரையிலான டாப் அப் பிளான்கள் கிடைக்க துவங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ இந்த புதிய திட்டங்களை ஆல் இன் ஒன் திட்டங்களாக அழைக்கிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பிற்கு நிமிடங்களை கூட வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ஆல் இன் ஒன் திட்டங்கள் முறையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் கிடைக்கின்றது. ரூ.222, ரூ.333 ரூ.444 மற்றும் ரூ.555 என மொத்தம் நான்கு விலையில் வருகின்றன.
ஜியோவிலிருந்து ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம் 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 1000 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.
ரூ.333 திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 1000 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.
ரூ 444 திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 1000 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.
ரூ 555 திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 3000 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.
பிளான் | வேலிடிட்டி | டேட்டா (GB) | அழைப்பு நன்மை |
ரூ. 222 | 28 நாட்கள் | 56GB at தினமும் 2GB | ஜியோ டூ ஜியோ இலவசம் ஜியோ டூ மற்ற நெட் FUP 3,000 நிமிடம் |
ரூ. 333 | 56 நாட்கள் | 112GB at தினமும் 2GB | |
ரூ. 444 | 84 நாட்கள் | 168GB at தினமும் 2GB | |
ரூ. 555 | 84 நாட்கள் | 168GB at தினமும் 2GB/day | ஜியோ டூ ஜியோ இலவசம் ஜியோ டூ மற்ற நெட் FUP 3,000 நிமிடம் |
ஜியோவின் ஏற்கனவே இருக்கின்ற, ஒரு நாளைக்கு 2 ஜிபி திட்டத்தோடு ஒப்பிடுகையில் 3-மாத காலத்திற்கு, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா திட்டம் ரூ.448-க்கு பதிலாக இப்போது இதற்கு ரூ.444 மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், 2 ஜிபி முந்தைய விலையான ரூ.396 பதிலாக இப்போது ரூ.333 க்கு கிடைக்கிறது.
1000 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு ரூ.80 கூடுதலாக ரூ.448, ரூ.396 மற்றும் 28 நாட்கள் பிளான் ரூ.198 ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டும்.
முன்னணி போட்டியாளர்களான வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.333 மற்றும் ரூ.444 போன்ற திட்டங்களை வழங்கவில்லை என ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது.