ஜியோ வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சிறப்பு டேட்டா பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு சிறப்பு டேட்டா திட்டங்களின் மூலமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக ரூ.2,599 மற்றும் ரூ.401 என இரண்டு பிளான்கள் உட்பட நான்கு டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்றால் என்ன ?

பொதுவாக இந்திய அளவில் தற்போது வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமாகி வருகின்ற நிலையில், இதில் விஐபி மற்றும் பிரீமியம் என்ற இரு சந்தா திட்டங்கள் உள்ளன. இவற்றில் கட்டணம் செலுத்தி பல்வேறு பிரத்தியேக புதிய திரைப்படங்கள், வெப்சீரிஸ், பல்வேறு ஷோக்களை கண்டு மகிழுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் வருடாந்திர கட்டணமாக ரூ.399 செலுத்தி பயன்பெறக்கூடிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா திட்டத்தை ஒரு வருடத்திற்கு கூடுதல் கட்டணமின்றி வழங்குகின்றது. இதற்காக பிரத்தியேகமான திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜியோ ரூ.2,599 பிளான் சிறப்புகள் என்ன ?

ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி பெற்ற ரூ.2,599 பிளானில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 10 ஜிபி டேட்டா என மொத்தமாக இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் 740 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இது தவிர இலவச ஜியோ உள் அழைப்புகள் மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிடங்கள் வழங்குகின்றது. நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். கூடுதலாக ஜியோ சேவைகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை பெறலாம்.

ஜியோ ரூ.401

28 நாட்கள் வேலிடிட்டி பெற்ற ரூ.401 பிளானில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 6 ஜிபி டேட்டா என மொத்தமாக இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இது தவிர இலவச ஜியோ உள் அழைப்புகள் மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்குகின்றது. நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். கூடுதலாக ஜியோ சேவைகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை பெறலாம்.

மற்ற டேட்டா வவுச்சர்கள்

மேலே வழங்கப்பட்டுள்ள இரு பிளான்களை தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை இணைப்பாக பெற ரூ. 1,004, ரூ. 1,206, மற்றும் ரூ. 1,208 மூன்று டேட்டா வவுச்சர் வேலிடிட்டியுடன் கூடுதலாக ஒரு பிளான் முந்தைய பிளானுடன் இணைப்பாக ரூ.612 வழங்கப்படுகின்றது.

ரூ.612 பிளான் முந்தைய பயன்பாட்டில் உள்ள ப்ரீபெய்டு பிளானுடன் இணைப்பாக வழங்கப்பட்டு 72 ஜிபி டேட்டா மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 6000 நிமிட அழைப்புகள் வழங்கப்படும்.

ரூ.1004 பிளான் பிளானுடன் 200 ஜிபி டேட்டா உடன் 120 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.1206 பிளான் பிளானுடன் 240 ஜிபி டேட்டா உடன் 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ரூ.1208 பிளான் பிளானுடன் 240 ஜிபி டேட்டா உடன் 240 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.