ஜியோவின் பெரிய திரை பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருகை விபரம்

பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை கொண்ட பிரத்தியேகமான ஜியோ ஸ்மார்ட்போன் மாடலை ரிலையன்ஸ் ஜியோ தயாரிக்க அமெரிக்காவின் ஃபிளெக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகின்ற ஃபீச்சர் ரக ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ஃபீச்சர் ரக மொபைல் மாடலில் இருந்து விடுபட்டு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களை குறிவைத்து இந்த மாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜியோவின் பெரிய திரை பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருகை விபரம்

சென்னை அருகே அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள ஃபிளெக்ஸ் ஆலையில் மாதம் 40 முதல் 50 லட்சம் ஸ்மார்ட்போன் மாடல்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான நுட்ப விபரங்கள் வெளியாகவில்லை.

நிச்சயமாக பட்ஜெட் ரகத்தில் ஜியோ நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் இடம்பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.