ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் பிளான் சிறப்புகள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் (jiopostpaid plus) என்ற பெயரில் பல்வேறு அம்சங்களை வழங்கும் திட்டத்தை ரூ.399 முதல் ரூ.1,499 வரையிலான கட்டணத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்ட இந்த சிறப்பு போஸ்ட்பெயிட் பிளஸ் திட்டங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ்

ரூ.399 முதல் துவங்குகின்ற போஸ்ட்பெயிட் பிளஸ் திட்டத்தில் பொதுவாக நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோடிவி, ஜியோசவான்  போன்றவற்றின் இலவச OTT சந்தாக்கள் மற்றும் இலவச காலர் ட்யூன் வழங்கப்பட உள்ளது.

அடுத்தப்படியாக, 200 ஜிபி டேட்டா முதல் துவங்குகின்ற டேட்டா ரோல்ஓவர் 500 ஜிபி டேட்டா வரை வழங்குகின்றது. குடும்பத்திற்கு ஏற்ற பிளான்கள், சர்வதேச அழைப்புகள், இன் ஃபிளைட் கனெக்ட்டிவிட்டி மற்றும் சர்வதேச ரோமிங் வழங்குகின்றது.

ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தில் மொத்தமாக 75 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் பெறலாம்.

ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸில் 100 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் ஒரு சிம் கார்டு வழங்கப்படும்.

ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸில் 150 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் இரண்டு சிம் கார்டு வழங்கப்படும்.

ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸில் 200 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் மூன்று சிம் கார்டு வழங்கப்படும்.

உயர் ரக ரூ.1,499 பிளானில் 300 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 500 ஜிபி டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக வரம்பற்ற வாய்ஸ் கால் அழைப்புகளை அமெரிக்கா மற்றும் அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் பிளான் சிறப்புகள்

JioPostpaid Plus இணைப்பை எவ்வாறு பெறுவது?

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பைப் பெற டோர் ஸ்டெப் முறையில் பெற இயலும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற நெட்வொர்க்குகளின் தற்போதைய போஸ்ட்பெய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பில் 8850188501 என்ற எண்ணுக்கு ‘Hi’ என்று ஒரு செய்தியை அனுப்பலாம். அதன்பிறகு உங்களை தொடர்பு கொண்டு சிம் கார்டினை நேரடியாக உங்கள் வீட்டிலே வந்து வழங்குவார்கள்.

ஜியோ ப்ரீபெய்டு பயனர்கள் இந்த புதிய திட்டங்களுக்கு மாற 1800 88998899 என்ற எண்ணை அழைக்கலாம்.

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஜியோ ஏற்படுத்தியுள்ளது.