ரூ.98 பிளானை நீக்கிய ஜியோ.., இனி ரூ.129 முதல் ரீசார்ஜ் பிளான்கள் ஆரம்பம்

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக காலத்தில் பல்வேறு இலவச சலுகைகளுடன் துவங்கிய சேவை இப்போது படிப்படியாக கட்டண உயர்வை சந்திக்க துவங்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ரூ.98 குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தைச் செயற்படுத்தி வந்தது.

ஜியோ வெளியிட்டிருந்த ரூ.98 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி பெற்று அதிகபட்சமாக 2 ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம், மற்ற நெட்வொர்க்கிற்க்கு என தனியாக ஐ.யூ.சி டாப் அப் ரீசார்ஜ் மேற்கொள்ளும்படி அமைந்திருந்தது. இந்நிலையில், இந்நிறுவனம் இந்த திட்டத்தை முற்றிலும் ஜியோ கைவிட்டுள்ளது.

ரூ.129 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி பெற்று அதிகபட்சமாக 2 ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம், மற்ற நெட்வொர்க்கிற்க்கு 1000 நிமிடங்கள் வழங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரம்

ஜியோ பிளாட்ஃபாரமில் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வரும் நிலையில் ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி மற்றும் ஜெனரல் அட்லான்டிக் நிறுனங்களை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கே.கே.ஆர் ஈகுவிட்டி நிறுவனம் ரூ.11,367 கோடியை முதலீடு செய்து ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

ஜியோவில் மட்டும் கடந்த சில வாரங்களுக்குள் ரூ.78,562 கோடி முதலீட்டை 5 நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளது.

ரூ.98 பிளானை நீக்கிய ஜியோ.., இனி ரூ.129 முதல் ரீசார்ஜ் பிளான்கள் ஆரம்பம்