ஜியோ
ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், பிரைம் சந்தா நன்மையை மேலும் ஒரு வருடத்துக்கு எவ்விதமான கட்டணமும் இன்றி தானாகவே இலவசமாக ரிலையன்ஸ் நிறுவனம் நீட்டித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ? ஜியோ வழங்கும் கூடுதல் நன்மைகளை பெற அறிவிக்கபட்ட சிறப்பு மெம்பர்ஷிப் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜியோ பிரைம் சந்தா விபரம்

ஜியோ நிறுவனம், தனது பயனாளர்களுக்கு ரூ.99 கட்டணத்தில் வழங்கிய பிரைம் மெம்பர்ஷீப் சந்தா தொடர்ந்து இலவசமாக தனது முந்தைய பயனாளர்கள் அனைவருக்கும் எவ்விதமான கூடுதல் கட்டணமுமின்றி நீட்டித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ?

கடந்த 2017 ஆம் வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ்செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான டேட்டா மற்றும் அழைப்பு பலன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டும் கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவத்தின் செயலிகளான, ஜியோ டிவி, ஜியோ சவான் மியூசிக், ஜியோ நியூஸ் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்திக்ககூடும்.

இந்நிலையில் ஜியோ ப்ரைம் சந்தா மார்ச் 31, 2019 உடன் நிறைவுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பிரைம் சந்தாவை இலவசமாக அறிவித்துள்ளது.

இதனை அறிய உங்கள் மொபைலில் மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து “My Plans”  பிரிவில் அறிந்து கொள்ளலாம்.