ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறைரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜியோ பிரைம் சந்தா திட்டத்தை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மார்ச் 31, 2019 வரை ஜியோ பயனாளர்கள் கூடுதல் டேட்டா மற்றும் ஜியோ ஆப் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என அதிகார்வப்பூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ பிரைம்

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை

கடந்த ஆண்டு ஜியோ பிரைம் சந்தா கட்டணம் ரூ.99 செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பிரைம் கட்டணம் மார்ச் 31, 2018 வரை மட்டுமே அறிவித்திருந்த நிலையில், நாளை வரை அதாவது மார்ச் 31, 2018 பிரைம் சந்தா கட்டணத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா என்ற சந்தேகத்துக்கு ஜியோ நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஜியோ 4ஜி நெட்வொர்க் நாடு முழுவதும் 17.5 கோடி வாடிக்கையாளர்களை பெற்று விளங்கும் நிலையில் , பிரைம் எனப்படுகின்ற ரூ.99 வருடாந்திர கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான டேட்டா மற்றும் ஜியோ ஆப்கள் முற்றிலும் இலவசமாக பெறலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.

தங்களது புதிய மற்றும் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களும் , டிஜிட்டல் லைஃப் அனுபவத்தினை இந்தியர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் , இந்த திட்டம் உலகின் மிக சிறப்பான வகையிலான திட்டமாக இருக்கும் என ஜியோ குறிப்பிட்டுள்ளது.

எனவே ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் சந்தா மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய 4ஜி ஜியோ சிம் பயனாளர்கள் தொடர்ந்து ரூ.99 கட்டணத்தில் சந்தா திட்டம் செலுத்தலாம்.

இலவசமாக ஜியோ பிரைம் மெம்பர்ஷீப்பை புதுப்பிப்பது எப்படி ?

உங்கள் ஸ்மார்ட்போனில் மை ஜியோ ஆப்பினை (MyJio) இன்ஸடால் செய்த பின்னர் உங்கள் ஜியோ மொபைல் எண்ணை கொண்டு உள்நுழைந்து ஜியோ சந்தாவை புதுப்பிக்க விருப்பமா என்ற கேள்விக்கு get now என்ற பதில் வாயிலாக ஒரு வருடத்திற்கு சந்தா நீட்டிக்கப்படும்.

பின் வரும் படங்களில் உள்ள வழிமுறையை பின்பற்றி ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தாவை வருடத்திற்கு இலவசமாக புதுப்பிக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை