இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி 4ஜி டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்திருந்த ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டம் மார்ச் 31, 2018 தேதியுடன் பெரும்பாலான பயனாளர்களுக்கு நிறைவு பெற உள்ளதால் பிரைம் உறுப்பினர் திட்டத்தை புதுப்பிக்க வேண்டுமா ? என அறிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த செப்டம்பர் 2016-யில் தனது சேவையை வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் இலவசமாக தொடங்கிய , பிறகு 2017 ஆம் ஆண்டில் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என கூடுதலாக 3 மாதங்கள் என தொடர்ந்து 6 மாதங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கியது, அதனை தொடர்ந்து ஏப்ரல் 2017 -யில் கட்டண சேவைக்கு மாறிய ஜியோ சிறப்பு சலுகையாக பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்துடன் சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை நீட்டித்தது குறிப்பிடதக்கதாகும்.

கடந்த ஏப்ரல் 2017யில் ஜியோ வெளியிட்ட ரூ.99 மதிப்பிலான ப்ரைம் மெம்பரஷிப் திட்டம், கூடுதலான டேட்டா நன்மைகள் , இலவச வாய்ஸ் கால், ஜியோ ஆப் பயன்பாடுகள் முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து பெரும்பாலான பயனாளர்களை ஜியோ தனது வசம் தக்கவைத்துக் கொண்டது.

தற்போது மார்ச் 31, 2018 ஆம் தேதியுடன் பெரும்பாலான ஜியோ பயனாளர்களின் ரூ.99 வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறைவடைவதனால், விரைவில் பயனாளர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதனால், இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஜியோ ப்ரைம் திட்டம் தொடர்ந்து ரூ.99 கட்டணத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளதால், சிறப்பு டேட்டா சலுகைகளை ஜியோ வெளியிட வாய்ப்புள்ளதால், தொடர்ந்து செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்….