Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு

நடப்பு 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரித்த்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 65 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும்.

ஜியோ Q3 லாபம்

முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வருகின்றது. கடந்த செப்டம்பர் 2016-யில் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து , தற்போது சுமார் 28.1 கோடி வாடிக்கையாளர்களை பெற்று விளங்குகின்றது.

கடந்த 2018-2019 ஆம் நிதி வருடத்தின் மூன்றாவது காலண்டு எனப்படுகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.831 கோடியாக வருமானம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ. 681 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 65 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 18 கோடியாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை , கடந்த 2018 டிசம்பர் மாத முடிவில் 28 கோடியாக அதிகரித்துள்ளது.

Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு

சராசரி வருமானம் சரிவு

ஜியோ சிம் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், ஜியோ நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் சராசரி வருமானம் கனிசமாக குறைந்துள்ளது. ரூ.131 ஆக இருந்த வாடிக்கையாளரின் சராசரி மாத வருமான ரூ.130 ஆக குறைந்துள்ளது.

சில முக்கிய குறிப்புகள்

ARPU எனப்படுவது ரூ.130 ஆக குறைந்துள்ளது (முன்பு ரூ.131 ஆக இருந்தது).

ஒவ்வொரு பயனாளரின் டேட்டா பயன்பாடு சராசரியாக மாதந்தோறும் 10.8 ஜி.பி. டேட்டா ஆகும்.

ஒவ்வொரு பயனாளரின் வாய்ஸ் கால் பயன்பாடு சராசரியாக மாதந்தோறும் 794 நிமிடங்கள் ஆகும்.

மொத்த வாடிக்கையாளரின் டேட்டா பயன்பாடு 864 கோடி GB ஆகும்.

மொத்த வாடிக்கையாளரின் அழைப்பு நிமிடங்கள் 63,406 கோடி நிமிடங்கள்

மாதந்திர வீடியோ பார்க்கும் மணி நேரம் 460 கோடி மணி நேரமாக அதிகரித்துள்ளது.

Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு

ஜியோ ஃபைபர்

ஜியோ நிறுவனத்தின் FTTH உயர்வேக பிராட்பேண்டு சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் மிக சிறப்பான வரவேற்பு உள்ளதால், அடுத்த சில மாதங்களில் பல்வேறு முன்னணி நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 1400 நகரங்களில் ஜியோ ஃபைபர் சேவை தொடங்கப்பட உள்ளது.

Reliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு