இந்தியாவில் மிக வேகமாக 4ஜி சேவையை செயற்படுத்த உதவிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து இணைய வேகத்தை போட்டியாளர்களை விட சிறப்பான 21.8 mbps தரவிறக்க வேகத்தை அக்டோபர் மாத முடிவில் வழங்குவதனால் மிக வேகமான நெட்வொர்க் என டிராய் உறுதி செய்துள்ளது.

4ஜி வேகத்தில் ஜியோ

நிறைவுற்ற அக்டோபர் 2017 மாதந்திர வேகத்தை சோதனை செய்ய மைஸ்பீட் ஆப் வாயிலாக சோதனை செய்ப்பட்டதில், முதல் நான்கு இடங்களில் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையம் இந்தியாவின் மை ஸ்பீட் ஆப் வாயிலாக தரவிறக்க வேகத்தை சோதனையின் முடிவில், ஜியோ நிறுவனம் 21.8 mbps வழங்குவதுடன், அதனை தொடர்ந்து வோடஃபோன் 9.9 Mbps வேகத்துடனும், ஏர்டெல் 9.3 Mbps மற்றும் ஐடியா 8.1 mbps வேகத்தை வழங்குகின்றது.

4ஜி சேவையின் தரவேற்ற வேகத்தில் ஐடியா  7.1 Mbps அதனை தொடர்ந்து வோடஃபோன்  6.2 Mbps , ஜியோ  4.9 Mbps மற்றும் ஏர்டெல்  3.9 Mbps வேகத்தை வழங்குகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து புள்ளி விபரங்களும் டிராய் அமைப்பின் அதிகார்வப்பூர்வ செயலி மை ஸ்பீட் ஆப் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளது.