லாபத்தில் இயங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் நிகர லாபம் மட்டும் ரூபாய் 840 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 2018-19 நிதியாண்டின் நான்காவது காலக்கட்டத்தில் மட்டும் ரூ.11,106 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிகையில் 7 சதவிகிதம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 55.8 சதவிகிதம் அதிகரித்துள்ள. இதன் மூலம் நிகர லாபம் மட்டும் ரூ.840 என முகேஷ் அம்பானியின் ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் சில முக்கிய புள்ளி விபரங்கள்
  • ஒவ்வொரு பயனாளரிடமிருந்து ஜியோ சராசரியாக மாதம் ரூ.126.20 பைசா வருவாயை பெற்றிருக்கிறது.
  • மொத்த மொபைல் டேட்டா பயன்பாடு 956 கோடி ஜிபி
  • வாய்ஸ் கால் மட்டும் தினமும் 72,414 கோடி நிமிடங்களும்
  • ஒரு பயனர் மாதம் சராசரியாக 823 நிமிடங்கள் பயன்படுதுகிறார்
  •  வீடியோ தரவு பயன்படுத்துவோர் மாதம் 500 கோடி மணி நேரங்களாகும்.
  • பயனர் ஒரு மாதத்தில் சராசரியாக 10.9 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறார்கள்.
மேலும் மார்ச் 31, 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ சேவையை பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை 30.67 கோடியாக உயர்ந்துள்ளது.. முந்தைய காலாண்டில் ஜியோ பயனர் எண்ணிக்கை 28.01 கோடியாக இருந்தது. இதன் மூலம் உலகில் அதிவேகமாக 30 கோடி பயனர்களை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸின் ஜியோ பெற்றிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் சேவையை வழங்குவதில் முன்னிலை பெற்றுள்ளது. இனி அடுத்த கவனம் ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவையின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. எனவே, இந்தியா முழுக்க 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் ஹோம் பிராட்பேண்ட், என்டர்டெயின்மென்ட், ஸ்மார்ட் ஹோம், வயர்லைன் மற்றும் வர்த்தக சேவைகள் விரைவில் முதற்கட்ட வர்த்தக ரீதியான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.