இந்தியாவில் 4ஜி சேவையை மிக வேகமாக கொண்டு சேர்த்த பெருமைக்குரிய ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் மீண்டும் அதிரடியான ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018 திட்டங்களை அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018

ஏர்டெல், வோடபோன்,ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் ஜியோ நிறுவனம் இரண்டு விதமான டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது, தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 1.5ஜிபி டேட்டா என இரு விதமான திட்டங்களில் முந்தைய திட்டங்களை விட ரூ.50 விலையை குறைத்துள்ளது.

தினமும் 1ஜிபி டேட்டா

தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் ஜியோ தொலைத்தொடர்பு திட்டங்களை காணலாம். தற்போதைய ரூ 199, ரூ 399, ரூ 459 மற்றும் ரூ 499 ஆ1கிய திட்டங்களில் விலை ரூ.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.349 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 70 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.399 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.449 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 91 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

தினமும் 1.5 ஜிபி டேட்டா

புத்தம் புதிதாக தினமும் 1.5ஜிபி உயர்வேக டேட்டா வழங்கும் வகையில் முந்தையை திட்டங்களை அடிப்படையாக கொண்டு கூடுதல் டேட்டாவை வழங்கியுள்ளது.

புதிய திட்டங்களான ரூ. 198, ரூ 398, ரூ 448 மற்றும் ரூ. 498 ஆகியவற்றை வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ ஆப்ஸ் பயன்பாடுகளை வழங்குகின்றது.

ரூ.198 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.398 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 70 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.448 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.498 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 91 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளான ஜியோ டிவி , ஜியோ சினிமா உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம்.