இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் புதிய 2018 குடியரசு தின சிறப்பு டேட்டா பிளான்களை போட்டியாளர்களுக்கு எதிராக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ குடியரசு தின 2018 ஆஃபர்

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு மிக கடுமையான சவால்கள் நிறைந்த திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.அந்த வரிசையில் நாட்டின் 69வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் 4ஜி சேவையில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்குகூடுதல் டேட்டா மற்றும் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் தொடக்கநிலை பிளானாக கருதப்படுகின்ற ரூ.98 மதிப்பிலான திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 2ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

ஜியோ 1.5 ஜிபி டேட்டா பிளான்

இதுவரை, தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் ஜியோ தொலைத்தொடர்பு திட்டங்களை காணலாம். தற்போதைய ரூ 149, ரூ 349, ரூ 399 மற்றும் ரூ 449 ஆகிய திட்டங்களில் தற்போது கூடுதலாக 0.5 ஜிபி டேட்டா வழங்க உள்ளது

ரூ.149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.349 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 70 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.399 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.449 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 91 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ஜியோ 2 ஜிபி டேட்டா பிளான்

புத்தம் புதிதாக தினமும் 2 ஜிபி உயர்வேக டேட்டா வழங்கும் வகையில் முந்தையை திட்டங்களை அடிப்படையாக கொண்டு கூடுதல் டேட்டாவை வழங்கியுள்ளது.

புதிய திட்டங்களான ரூ. 198, ரூ 398, ரூ 448 மற்றும் ரூ. 498 ஆகியவற்றை வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ ஆப்ஸ் பயன்பாடுகளை வழங்குகின்றது.

ரூ.198 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.398 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 70 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.448 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

ரூ.498 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 91 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.

அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளான ஜியோ டிவி , ஜியோ சினிமா உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here