ஜியோ

நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக அவுட்கோயிங் அழைப்புகளுக்கு வசூலிக்கபடும் என ஜியோ அறிவித்ததை தொடர்ந்து, தற்பொழுது குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்களை நீக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் ஆரம்ப கட்ட பிளான் ரூ.98 முதல் மட்டுமே தொடங்குகின்றது.

மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ரூ.10 முதல் ரூ.1000 வரை ஐயூசி டாப் அப் கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.10-ல் தொடங்குகின்ற பிளானில் 124 நிமிடங்கள் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ள இயலும்.

ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக வரம்பற்ற காம்போ மற்றும் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களுடன், நன்மைகளைப் பொறுத்தவரை, எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்க ரூ. 19 பிளானில் 150MB டேட்டாவுடன் மற்றும் 20 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ஒரு நாள் வேலிடிட்டி வழங்கப்படும். ரூ. 52 பிளானில் 1.05 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 70 எஸ்எம்எஸ் ஒரு வாரம் அல்லது ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

இனி, குறைந்தபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற காம்போ பேக்குகள் ரூ.98 முதல் தொடங்குகின்றன, மேலும், 2 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.