ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட்

நாட்டின் முன்னணி 4ஜி சேவை  வழங்குநராக விளங்கும் ஜியோ நிறுவனம், தனது புதிய ஜியோ டிரிப்ள் பே ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் பயனாளர்களுக்கு 28 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது.

இலவச வாய்ஸ் கால், டேட்டா திட்டங்கள், மற்றும் ஐபிடிவி உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் செயற்படுத்தப்பட உள்ளது.

100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ டிரிப்ள் பே பிளான் பற்றி தெரியுமா .?

ஜியோ டிரிப்ள் பே பிளானில் உள்ள சிறப்புகள்

ஃபைபர் டூ தி ஹோம் முறையிலான அதிவேக இணைய சேவையை வழங்கும் ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பரவலாக நாடு முழுவதும் உள்ள முன்னணி நகரங்களில் ஜியோ நிறுவனம் சோதனை செய்து வருகின்றது.

டிரிப்ள் பே பிளான் குறித்தான தகவலை டெலிகாம் டாக் தளம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் பயனளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 1000Mbps இணைய வேகத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஜியோ செயலிகள், ஐபிடிவி உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது.

வரம்பற்ற முறையில் ஜியோ இணையத்தை வழங்குவதுடன் 100 ஜிபி டேட்டா உயர்வேகத்தில் வழங்கப்படும். பிறகு இணைய வேகம் சராசரிக்கு கீழாக குறைக்கப்பட உள்ளது. நாட்டின் பொரும்பாலான பகுதிகளில் ஜியோவின் குறிப்பிட்ட சில பயனாளர்கள் மற்றும் ஜியோ பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஜிகா ஃபைபர் வழங்கப்படுகின்றது. இணையத்தின் மூலம் தொலைக்காட்சியை சேவையை வழங்கும் ஐபிடிவி முறையும் இலவசமாக வழங்ப்பட்ட உள்ளது.

100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ டிரிப்ள் பே பிளான் பற்றி தெரியுமா .?

விரைவில் நாட்டின் முன்னணி நகரங்களில் ஜியோ ஜிகா ஃபைபர் டிரிப்ள் பே திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தைப் பெற பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூபாய் 4500 செலுத்த வேண்டியிருக்கும்.