விரைவில் ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை அறிமுகம்இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், 100GB இலவச டேட்டாவுடன் FTTH (Fiber to the Home) ஜியோ பைபர் (JioFiber FTTH) பிராட்பேண்ட் சேவையை மார்ச் மாத இறுதியில் அதிகார்வப்பூர்வமாக செயற்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட்

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை அறிமுகம்

கடந்த சில மாதங்களாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஃபைபர் சேவையை முதற்கட்டமாக 10 முன்னணி நகரங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

4ஜி டெலிகாம் சேவையில் தொடர்ந்து அபரிதமான வளர்ச்சியை அடைந்து வரும் ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு விலையிலான டேட்டா திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், இதே போன்ற அதிரடி சலுகையை  ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையிலும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

குறிப்பாக ரூ.4500 பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்தி மூன்று மாதங்களுக்கு ஃப்ரிவியூ ஆஃபர் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் 100ஜிபி அளவிலான இலவச தரவுகளை 100mbps வேகத்தில் பெற உதவும் என தகவல்கள் உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை அறிமுகம்

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் – மும்பை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருவதனால் முதற்கட்டமாக மேலே வழங்கப்பட்டுள்ள நகரங்களில் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இந்த சேவையில் பிராட்பேண்ட் இணைப்பின் வாயிலாக தொலைக்காட்சி சேவையை பெறுவதற்கான சேவையை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஏக்ட் ஃபைபர் உள்ளிட்ட முன்னணி பிராட்பேண்ட் வழங்குநர்களுக்கு சவாலாக விளங்க உள்ளது.

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here