வணிக ரீதியாக வெற்றி பெறுவதனை விட அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெறுவதனை நோக்கமாக கொண்டு முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு ரிலையன்ஸ் ஜியோ செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற ரிலையன்ஸ் ஜியோ மொத்தமாக 33.1 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான சரிவினை போட்டியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட ஜியோ தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் ARPU Q1 FY20-யில் ரூ .122 ஆக குறைந்துள்ளது. முன்பாக ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாய் ரூ.126 ஆக இருந்தது. இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ, இப்போது தனது நோக்கத்தை மேலும் சந்தாதாரர்களைச் சேர்ப்பதே தவிர வருவாயை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என ஜியோவின் மூலோபாயாத் தலைவர் அனுஷ்மன் தாக்கூர் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர்
விரைவில், நாடு முழுவதும் இந்நிறுவனத்தின் உயர் வேக கம்பி வழி இணைய சேவையாக விளங்க உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகா ஃபைபர் குறித்த முக்கிய அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42 ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் (Reliance Industries AGM) அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.