4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ - டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாதந்தோறும் வெளியிடும் இணைய அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் தொடர்பான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் 20.3 Mbps என பதிவாகியுள்ளது.

டவுன்லோடு ஸ்பீடு

முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத முடிவில் சரிவை கண்டிருந்தாலும் போட்டியாளர்களை விட கூடுதல் வேகத்தை ஜியோ வழங்கியுள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் நவம்பரில் 9.7 Mbps (அக்டோபரில் 9.5 Mbps) வேக இணையத்தை வழங்கியுள்ளது.

4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ - டிராய்

வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டாலும், இரு நிறுவனங்களின் இணைய வேகம் தனித்தனியே டிராய் வெளியிட்டுள்ளது. வோடபோன் நிறுவனம் சராசரியாக நவம்பரில் 6.8 Mbps (அக்டோபரில் 6.6 Mbps) ஆக அதிகரித்துள்ளது. ஐடியா செல்லுலாரை பொறுத்தவரை நவம்பர் மாத முடிவில் 6.2 Mbps (அக்டோபரில் 6.4 Mbps வேகம்) ஆக குறைந்துள்ளது.

அப்லோடு ஸ்பீடு

4ஜி இணைய தரவேற்ற வேகத்தில் தொடர்ந்து ஐடியா முன்னிலை வகித்து வருகின்றது. ஐடியா நிறுவனம் நவம்பரில் 5.6 Mbps வேகத்தை பதிவு செய்துள்ளது.  வோடபோன் இந்தியா 4ஜி அப்லோடு ஸ்பீடில் 4.9 Mbps வேகத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ 4ஜி நிறுவனம் 4.5 Mbps வேகத்துடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இறுதியாக ஏர்டெல் நிறுவனம் நவம்பரில் 4 Mbps வேகத்தை பெற்றுள்ளது.

4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ - டிராய்