இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் நவம்பல் 2017-யில் தரவிறக்க வேகத்தில் அதிகபட்சமாக 25.6 mbps வழங்கி தொடர்ந்து 11வது மாதமாக முதலிடத்தில் உள்ளது.
4ஜி நொட்வொர்க் ஜியோ
நவம்பர் 2017-யில் 4ஜி சேவையில் மிக வேகமாக தரவிறக்க தரவுகளை வழங்கி நிறுவனங்களில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவிறக்க வேகம் – நவம்பர் 2017
ஜியோ – 25.6 mbps
வோடபோன் – 10 mbps
பார்தி ஏர்டெல் – 9.8 mbps
ஐடியா செல்லுலார் – 7 mbps
தரவேற்றும் வேகம் – நவம்பர் 2017
வோடபோன் – 6.9 mbps
ஐடியா செல்லுலார் – 6.6 mbps
ஜியோ – 4.9 mbps
பார்தி ஏர்டெல் – 4 mbps
4G சேவை வழங்குவதில் முன்னணியாக விளங்கும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து கடந்த 11 மாதங்களாக மிக வேகமான தரவிறக்க வேகத்தை வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.
டிராய் அமைப்பின் மை ஸ்பீட் ஆப் வாயிலாக சோதனை செய்து உங்களுடைய இணைய வேகத்தை மிக இலகுவாக பரிசோதிக்கும் வகையிலான நடைமுறையை இந்த செயலி வழங்கி வருகின்றது.