மீண்டும் இலவசம்..! ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்

ஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டவுடன், மற்ற நெட்வொர்க் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை முன்பே அறிவிதிருந்தது. அதனை ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்புகளையும் இலவசமாக்கும் என்று நிறுவனம் கூறியது. உள்நாட்டு குரல் அழைப்புகள் எப்போதும் இனி ஜியோ நெட்வொர்க்கில் இனி இலவசமாக மேற்கொள்ளலாம்.

முன்பாக இதற்கு மற்ற நெட்வொர்க் அழைப்பு கட்டணம் 6 பைசா வசூலிக்கப்பட்டு வருகின்றது.

செப்டம்பர் 2019 இல், டிராய் ஐயூசி கட்டணத்தை நீக்குவதற்கான காலக்கெடுவை 2020 ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்தபோது, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃப் நெட் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கத் துவங்கியது.