ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி சேவையில் புதிதாக வாய்ஸ் ஓவர் வை-ஃபை ((voice over Wi-Fi)) சேவையை சோதனை செய்து வருகின்றது. ஜியோ VoWi-Fi என்றால் என்ன ? அதன் பலன்கள் என்ன தெரிந்து கொள்ளலாம்.

இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி மிக குறைந்த விலையில் டேட்டா சலுகை மற்றும் இலவச அழைப்பு என பலவற்றை வழங்கி வரும் நிலையில், அடுத்த கட்டமாக செல்லுலார் தொடர்பு கிடைக்கப் பெறாத இடங்கள் மற்றும் நேரங்களிலும் வை-ஃபை வாயிலாக அழைப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஜியோ VoWi-Fi என்றால் என்ன ?

4ஜி சேவையில் எல்டிஇ நுட்பத்தில் VoLTE எனும் நுட்பத்தின் வாயிலாக உயர்தர நுட்பத்தில் மிக தெளிவான அழைப்புகளை பெற வழி வகுக்கும் நிலையில், வை-ஃபை மூலம் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள வசதிதான் VoWi-Fi ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சமீபத்தில் டெலிகாம் டாக் தளம் வெளியிட்டுள்ள மொபைல் ஸ்கீரின் ஷாட்டில், மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஜியோ வோ வை-ஃபை சோதனை செய்ப்படுவதனை உறுதி செய்துள்ளது. மத்தியபிரதேசம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்நிறுவனம் இதனை சோதனை செய்து வருகின்றது.

சமீபத்தில் பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் 4ஜி VoLTE நுட்பத்தை போன்றே VoWi-Fi நுட்பத்தை அடிப்படை அம்சமாக சேர்த்து வரும் நிலையில், மேலும் விற்பனை செய்யப்பட மொபைல்களிலும் சாப்ட்வேர் வாயிலாக இந்த வசதியை பெறலாம். எனவே விற்பனை செய்யப்பட்ட ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவற்றில் இந்த வசதி இணைக்கப்படலாம்.

ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் அல்லது டிராய் நாடு முழுவதும் இலவச வை-ஃபை சேவையை தொடங்குவதற்கு என புதிய வரைவை வெளியிட்டுள்ளதால், இந்த சேவையின் வாயிலாக வை-ஃபை அழைப்புகளை மேற்கொள்ள இயலும். ஜியோ மட்டுமல்லாமல், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனமும் VoWi-Fi முறைக்கான சோதனை ஓட்டத்தில் களமிறங்கியுள்ளன.  ஜியோ VoWi-Fi  சேவையில் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கப் பெறலாம்.