இந்தியாவின் முன்னணி 4ஜி வோல்ட்இ சேவையை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சியோமி மொபைல் தயாரிப்பாளரின் தேசத்தின் ஸமார்ட்போன் என அழைக்கப்படும் ரெட்மி 5A மொபைல் பயனாளர்களுக்கு புதிய திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஜியோ 199

இந்திய தொலைத்தொடர்பு துறையை மிக கடுமையான சவால்கள் நிறைந்த துறையாக மாற்றி ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் மொபைல் போன் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பன்டில் டேட்டா சலுகைகளை அறிவித்து வருகின்றது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5ஏ மொபைல் போனுடன் முதல் ஜியோ ரீசார்ஜ் ரூ.199 திட்டத்தை டிசம்பர் 5, 2017 முதல் நவம்பர் 30, 2018 வரையிலான கால கட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் மாதந்தோறும் ரூ.100 கேஸ்பேக் என மொத்தம் 10 மாதங்களுக்கு ரூ.1000 கேஸ்பேக் பெறுவதுடன், தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி உயர்வேக டேட்டாவுடன் கூடிய வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் கால அளவுடன் பெறலாம்.

சியோமி ரெட்மி 5ஏ மொபைல் போன் ரூ.5,999 ஆரம்ப விலையில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்ளகளுக்கு ரூ.1000 தள்ளுபடியில் ரூ.4,999 க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 கேஸ்பேக் வழங்கப்படுவதனால் ரூ.3,999 மட்டுமே ஆகும்.

ரெட்மி 5ஏ மொபைல் போன் ரூ.6,999 ஆரம்ப விலையில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் மற்றொரு மாடலும் கிடைக்கின்றது. கேமரா துறையில் 13 மெகாபிக்சல் மற்றும் செல்ஃபி படங்களுக்கு 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – சியோமி ரெட்மி 5ஏ மொபைல் போன் விபரம்