ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ "ஜீரோ டச்" பிளான் அறிமுகம்

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், புதுமையான முறையில் ஜியோ ஜீரோ டச் ( Jio Zero-Touch) என்ற பெயரில் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜீரோ டச்

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ "ஜீரோ டச்" பிளான் அறிமுகம்

4ஜி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் , மிகவும் சவாலான கட்டணத்தில் டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ரோமிங் இல்லா ஒரே இந்தியா திட்டம் என பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தி மிக விரைவாக சந்தையை கைப்பற்றி உள்ள நிலையில் , போஸ்ட்பெய்டு திட்டத்தில் அடுத்த அதிரடியை தொடங்க ஜீரோ-டச் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜீரோ டச் என்றால் என்ன ?

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கான என பிரத்தியேகமான ஜீரோ டச் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மே 15 முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த திட்டம் போஸ்ட்பெய்டு பயனாளர்களின் நிலையை வெகுவாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல், ஆட்டோ பே வசதி கொண்டதாகவும் மற்றும் பல்வேறு சேவைகள் முன்னேற்பாடக வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ "ஜீரோ டச்" பிளான் அறிமுகம்

ஜியோ 199 பிளான்

ரூ.199 கட்டணத்தில் ஒரு பில்லிங் சைக்கிள் (30 நாட்கள்) நிரண்யம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 199 கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குவதுடன், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் உயர் வேக 25ஜிபி டேட்டா வழங்குகின்றது. மேலும் கூடுதல் சலுகையாக  ஜியோ டிவி, ஜியோ மியூசிக், ஜியோ மூவிஸ் , மேலும் பல்வேறு ஜியோ செயலிகளை இலவசமாக வழங்குகின்றது.

தேசிய ரோமிங் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்ற நிலையில் ஐஎஸ்டி அழைப்புகள் மற்றும் சர்வதேச ரோமிங் என எவ்விதமான பாதுகப்பு வைப்பு நிதியும் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ "ஜீரோ டச்" பிளான் அறிமுகம்

சர்வதேச அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில், வங்காளம், சீனா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூ. 2 கட்டணத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய அரபு  போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூ. 3 முதல் ரூ. 6 கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது.

மேலும் சர்வதேச ரோமிங் சேவையை அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இலங்கை, ஜப்பான், மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிமிட அழைப்பு ரூ. 2 , எஸ்எம்எஸ் ரூ. 2 மற்றும் ஒரு எம்பி டேட்டா ரூ. 2 மட்டும் ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ ஜீரோ டச் போஸ்ட்பெய்டு பிளான் மே 15 முதல் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ "ஜீரோ டச்" பிளான் அறிமுகம்