ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் : 1100 ஜிபி இலவச டேட்டா, 10 கோடி இல்லங்கள்

இந்தியாவில் மொபைல் டேட்டா சார்ந்த சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், பிராட்பேண்ட் சேவை வாயிலாக இணையத்தை வழங்க ஜியோ ஃபைபர் (Jio Fiber) என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் : 1100 ஜிபி இலவச டேட்டா, 10 கோடி இல்லங்கள்

வயர் வழியாக இணைய சேவை வழங்கி வரும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏக்ட் பிராட்பேண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நாடு முழுவதும் பிராட்பேண்ட் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நிலையில் முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 4ஜி சார்ந்த சேவைகளி ல் முன்னணி வகித்து வரும் நிலையில், வயர் வழியாக இணையத்தை வழங்க ஜியோ நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களில் சோதனை ஓட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

இந்தியாவின் முன்னணி நகரங்களான புதிய டெல்லி, மும்பை, சென்னை, ஜாம் நகர், அகமதாபாத் மற்றும் வதோத்தரா ஆகிய நகரங்களில் ஆப்டிக்கல் ஃபைபர் வாயிலாக சுமார் 30 நகரங்களில் 3 லட்சம் கிமீ தொலைவுக்கு இந்தியாவில் தற்போது வரை இணைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் : 1100 ஜிபி இலவச டேட்டா, 10 கோடி இல்லங்கள்

வரும் காலங்களில் நாடு முழுவதும் கம்பி வழி இணைய சேவையை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், சோதனை ஓட்டத்தில் ரூ.4500 திரும்ப பெறும் வகையிலான வைப்புத் தொகையை முன்பணமாக செலுத்தி ஒரு மாதத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டாவை 100 Mbps வேகத்தில் வழங்குகின்றது.  மேலும் இந்நிறுவனம், மாதம் 25 முறை வரை அதிகபட்சமாக ஒரு முறைக்கு 40ஜிபி டேட்டா என மொத்தமாக 1100 ஜிபி டேட்டா அதாவது , 1.1 டெராபைட் தரவினை வழங்குவதாக தி இந்து ஆங்கில இதழ் வாயிலாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இணையத்தை கணினி மற்றும் மடிக்கணினி சார்ந்த சேவைகளை தவிர இணையம் வழியாக ஸ்மார்ட் டிவி இணைக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் சுமார் 30 நகரங்களில் 10 கோடி இல்லங்களை ஜியோ ஃபைபர் சேவை வாயிலாக இணைக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் : 1100 ஜிபி இலவச டேட்டா, 10 கோடி இல்லங்கள்

இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 99 சதவீதம் பிராட் பேண்ட் வாயிலாக இணைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் முதற்கட்டமாக 30 நகரங்களில் ஜியோ ஃபைபர் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.