விரைவில்., 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை தொடங்கும் ரிலையன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் கம்பி வழி இணைய சேவையை விரைவில் தொடங்க உள்ளதை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக ஜிகா ஃபைபர் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சோதனை ஓட்டம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம், தனது மொபைல் பயனாளர்கள் எண்ணிக்கையை 30 கோடியாக உயர்ந்ததை தொடர்ந்து, இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 19 ஆண்டுகளில் பெற்ற 30 கோடி பயனாளர்கள் எண்ணிக்கையை, வர்த்தக ரீதியான அறிமுகத்திற்கு பிறகு 2.5 ஆண்டுகளில் ஜியோ சாதித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர்

தற்போது நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குதராக பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம் விளங்குகின்றது. ஏர்டெல், ஏக்ட் ஃபைபர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ஜிகா ஃபைபர் சேவை அமைய உள்ளது.

பிராட்பேண்ட் சேவையில் ரிலையன்ஸ் நிறுவனம், இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க பொதுவான டேட்டா சார்ந்த செயல்முறையை கடந்து ஸ்மார்ட் தொலைக்காட்சி வாயிலாக ஜிகா ஃபைபர் சேவையின் பயனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை வெளியிட உள்ளது.

விரைவில்., 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை தொடங்கும் ரிலையன்ஸ்

முதற்கட்டமாக FTTH ரீசார்ஜ் பிளானில் தற்போது பயனாளர்களுக்கு டிரிப்ள் பிளே பிளான் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிளானில் வரம்பற்ற முறையில் இணையத்தை வழங்குவதுடன் , அதிவேக 100 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கட்டண விபரங்கள் வெளியாகவில்லை.

டெலிகாம் சந்தையில், மற்றொரு புரட்சியை ஜியோ ஜிகாஃபைபர் வழங்குவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றது.