இந்திய தொலை தொடர்பு மற்றும் ஃபீச்சர் ரக மொபைல் போன் சந்தையில் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ. 2999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் 2 என்ற பெயரில் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலும் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் , ஜியோ தொடர்பான அறிவிப்பில் மிக முக்கியமாக ஜியோபோன் 2, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட், ஜிகா டிவி உள்ளிட்ட அம்சங்களுடன் ஜியோ 4ஜி சேவையில் 21.5 கோடி வாடிக்கையாளர்களை இந்திய அளவில் பெற்று விளங்குகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் பல்வைறு வசதிகளுடன் ப்ரீ லோட் செய்யப்பட்ட ஜியோ நிறுவன செயலிகள், பிறகு ஃபேஸ்புக் போன்றவை வழங்கப்பட்ட நிலையில், இதைவிட மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மொபைலை ஜியோபோன் 2 என்ற பெயரில் ஆகஸ்ட் 15ந் தேதி முதல் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

JioPhone 2 features:

ஆப்ரேட்டிங் சிஸ்டம் : ஃபயர்ஃபாக்ஸ் கெய் ஓஎஸ் (Kai OS)

ரேம் & சேமிப்பு : 512MB ரேம் மற்றும் 4GB உள்ளீட்டு சேமிப்பு

மைக்ரோ எஸ்டி கார்டு : 128GB வரை விரிவுப்படுத்தலாம்

டிஸ்பிளே :  2.4QVGA

கேமரா :  2 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் VGA முன்புற கேமரா

பேட்டரி : 2000mAh

மற்றவை ; இரட்டை சிம் கார்டு, LTE, VoLTE, மற்றும் VoWi-Fi, பண்பலை, வை ஃபை, ஜிபிஎஸ், Qwerty கீபோர்டு என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

ஜியோபோன் 2 மற்ற சிம் பயன்படுத்தலாமா ?

இரட்டை சிம் கார்டு ஆதரவை பெற்ற ஜியோபோன் 2யில் 4ஜி எல்டிஇ ஆதரவை பெற்ற Band 3, 5, 40 ஆகிய அலைவரிசையில் ஒரு சிம்கார்டினை பெறலாம். இதைத் தவிர மற்றொரு சிம் கார்டு ஸ்லாட்டில் 2ஜி சேவையை 900/1800 பேன்டில் பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோபோன் 2 தரவிறக்க வேகம் எப்படி ?

முந்தைய போனை போன்று அல்லாமல் ஜியோபோன் 2-யில் LTE Cat.4 மோடம் வழங்கப்பட்டு 150 Mbps தரவிறக்க வேகம் மற்றும் 50 Mbps தரவேற்ற வேகம் வழங்கப்பட்டுள்ளது.

மிக சிறப்பான சேவைகளை நாறள் முழுமைக்கு பயன்படுத்தும் வகையில் ஜியோபோன் 2 மொபைல் போனில் 2000mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஜியோபோன் 2 விலை விபரம்

இந்த, ஃபீச்சர் ரக ஸ்மார்ட்போன் முந்தைய ஜியோபோன் மாடலை காட்டிலும் ரூ. 1500 வரை விலை உயர்த்தப்பட்டு ரிலையன்ஸ் ஜியோபோன் 2 விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

Monsoon Hungama ஆஃபர் என்றால் என்ன ?

பயன்படுத்தி வருகின்ற உங்கள் ஃபீச்சர் ரக ஜியோபோனை கொடுத்து விட்டு புதிதாக ஆகஸ்ட் 15, 2018 முதல் கிடைக்க உள்ள ஜியோபோன் 2 மொபைலை ரூ. 501 கூடுதல் கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.