ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஜியோபோன் 2 ஃபீச்சர் ரக மொபைல் போனுடன் விற்பனையில் உள்ள ஜியோபோன் மாடலுக்கு உள்ள வித்தியாசம் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 மாடலில் குறிப்பாக யூடியப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற முக்கிய வதிகளை கெய் ஓஎஸ் வாயிலாக வழங்கியுள்ள நிலையில் , விற்பனையில் உள்ள ஜியோபோன் மாடலில் ஃபேஸ்புக் மற்றும் ஜியோ நிறுவனத்தின் செயலிகள் மட்டும் வழங்கப்பட்டு ஒற்றை சிப் கார்டு இடம்பெற்றிருந்தது.

ஜியோபோன் 2 Vs ஜியோபோன்

FeaturesReliance JioPhoneReliance JioPhone 2
டிஸ்பிளே2.4 அங்குல QVGA2.4 அங்குல QVGA
பிராசெஸர்ஸ்பிரெட்டிரம் 1.2 GHzஸ்பிரெட்டிரம் 1.2 GHz
ரேம்512MB512MB
சேமிப்பு4GB (128 GB எஸ்டி கார்டு)4GB (128 GB எஸ்டி கார்டு)
பின் கேமரா2 மெகாபிக்சல்2 மெகாபிக்சல்
முன் கேமராVGA கேமராVGA கேமரா
பேட்டரி2,000mAh2,000mAh
Connectivity4G LTE, Wi-Fi, Bluetooth, NFC4G LTE, VoWi-Fi Wi-Fi, Bluetooth, NFC
சிம்ஒற்றை ஜியோ சிம்இரட்டை சிம் கார்டு (ஜியோ & 2ஜி சிம் கார்டு)
ஆப்ஸ்ஜியோ ஆப்ஸ், ஃபேஸ்புக்யூடியூப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் & ஜியோ ஆப்ஸ்
ஓஎஸ்கெய் ஓஎஸ் (KaiOS)கெய் ஓஎஸ் (KaiOS)
விலைரூ. 1,500ரூ. 2,999

Monsoon Hungama ஆஃபர் என்றால் என்ன ?

பயன்படுத்தி வருகின்ற உங்கள் ஃபீச்சர் ரக ஜியோபோனை கொடுத்து விட்டு புதிதாக ஆகஸ்ட் 15, 2018 முதல் கிடைக்க உள்ள ஜியோபோன் 2 மொபைலை ரூ. 501 கூடுதல் கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.