நான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்

சமீபத்தில் ஸ்மார்ட்போன் பயணாளர்களுக்கு நான்கு ஆல்-இன்-ஒன் பிளான்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜியோபோன் பயன்படுத்தும் பயணாளர்களுக்கு ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 என மாறுபட்ட பிளான்களை வெளியிட்டு மாறுபாடான டேட்டா முறைகளை வழங்கியுள்ளது.

பொதுவாக ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 முதல் திட்டங்கள் தொடங்குகின்றது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வூலிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து அனைத்து பிளான்களுக்கும் ரூ.10 தொடங்கி அதிகபட்சமாக ரூ.1000 வரை ஐயூசி டாப் அப் கார்டுகளை வழங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ இந்த புதிய திட்டங்களை ஆல் இன் ஒன் திட்டங்களாக அழைக்கிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பிற்கு நிமிடங்களை கூட வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் மட்டும்  செல்லுபடியாகின்ற வகையில் கிடைக்கின்றது. ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 என மொத்தம் நான்கு விலையில் வருகின்றன.

ஜியோ போன் ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம் 0.1 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 500 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக 50 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.

ரூ.125 திட்டத்தில் 0.5 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 500 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.

ரூ . 155 திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 500 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.

ரூ. 185 திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்பு, 500 மற்ற நெட்வொர்க் குரல் அழைப்பு, கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் செயல்பாடுகள் வழங்குகிறது.

மேலும் படிக்க – ஜியோ ஸ்மார்ட்போன் ஆல்-இன்-ஓன் பிளான் விபரம்