மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியதுஇந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.1500 பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தி இலவசமாக பெற உள்ள  ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு அமேசான் இந்தியா, மொபிக்விக் மற்றும் jio.com இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியது

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முதற்கட்ட முன்பதிவை தொடங்கி சுமார் 60 லட்சம் மொபைல் போன்கள் வரை டெலிவரி தொடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முன்பதிவு ஜியோ அதிகார்வப்பூர்வ இணையதளம் தவிர, அமேசான் இந்தியா, மொபிக்விக் வாலெட் ஆகியவற்றிலும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் நுட்பம்

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற ஃபேஸ்புக், நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியது

டேட்டா பிளான் விபரம்

ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியது

புத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

அமேசான் மற்றும் மொபிக்விக் ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து ஜியோபோனை பெற்ற வாடிக்கையாளர்கள் ஜியோபோன் மொபைல் மற்றும் பாக்ஸூடன் ஆதார் கார்டினை கொண்டு அருகாமையில் உள்ள ஜியோ ரீடெயிலரை அனுகினால் உடனடியாக சிம்கார்டினை ஏக்டிவேட் செய்யலாம்.

மீண்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு தொடங்கியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here