பிரசத்தி பெற்ற குறைந்த விலை 4ஜி ஃபீச்சர் ரக மொபைல் போன் என அறியப்படுகின்ற ரிலையன்ஸ் ஜியோபோன் , தற்போது முன்னணி மொபைல் வாலெட் ஆக விளங்கும் மொபிக்விக் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜியோபோன் விற்பனை ஆரம்பம்

50 கோடி மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோபோன் முதற்கட்ட விற்பனையில் 60 லட்சம் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த விற்பனை தொடங்கப்படாமல் இருந்த நிலையில், மொபிக்விக் வாயிலாக விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

மொபிக்விக் இணையதளம் மற்றும் ஆப் சென்ற பிறகு Recharge & Bill Payment என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் சமயத்தில் ஜியோபோன் வாங்குவதற்கான டேப் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் நுட்பம்

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஜியோபோன் டேட்டா பிளான்

ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

புத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.