இந்தியாவின் பிரபலமான ஜியோ 4ஜி நொட்வொர்க்கு விற்பனைக்கு வெளியிட்டிருந்த ரிலையன்ஸ் ஜியோபோன் ஃபீச்சர் மொபைலின் ஜியோஆப் ஸ்டோரில் தற்போது ஃபேஸ்புக் ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஜியோபோன் ஃபேஸ்புக் ஆப்

ஃபீச்சர் ரக 4ஜி ஆதரவினை பெற்ற ஜியோபோன் மாடல் கோடிகணக்கான 2ஜி வாடிக்கையாளர்களை பெறும் நோக்கில் முதற்கட்ட விற்பனை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ஆஃப்லைன் மற்றும் மொபிக்விக் வாலெட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

ஃபயர்ஃபாக்ஸ் KaiOS அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இந்த மொபைலில் கூடுதலாக உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் செயலி ஜியோஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி வாயிலாக படங்கள்,வீடியோ, அறிவிப்புகள் மற்றும் வெளிப்புற இணைப்புகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் படங்கள் மற்றும் ஃபேஸ்புக்ஃபீட் ஆகியவற்றை அணுகும் வசதிகளும் உள்ளது.

விரைவில் இந்த மொபைல் போனில் வாட்ஸ்அப் , ட்விட்டர் போன்ற செயலிகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

ஜியோ போன் நுட்பம்

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஜியோபோன் டேட்டா பிளான்

ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

புத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.