Home Tech News Telecom ரூ.153 பிளானில் 28 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரூ.153 பிளானில் 28 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி 4ஜி வோல்ட்இ சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.153 பிளானில் கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்க தொடங்கியுள்ளது.

ஜியோபோன் 153 பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த ரூ.1500 மதிப்பிலான இலவச மொபைல் போனுக்கு ஆரம்பத்தில் ரூ.153 கட்டணத்தில் 14ஜிபி டேட்டா மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது 28ஜிபி டேட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 1ஜிபி உயர்வேக 4ஜி டேட்டா அதன் பிறகு 64Kbps வேகத்தில் டேட்டாவை அனுக இயலும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜியோபோன் 2.4 அங்குல திரையுடன் டி9 கீபோர்டு பெற்றதாக 320×240 பிக்சல் தீர்மானத்துடன் 512 எம்பி ரேம் கொண்டு இயக்கப்படுவதுடன் 4ஜிபி சேமிப்பு கொண்டதாக 32ஜிபி வரையில் நீட்டிக்கும் திறன் மைக்ரோ எஸ்டி அட்டை பெற்றதாக வந்துள்ளது.

மேலும் கேமரா பிரிவில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மற்றும் முன்புறத்தில் 0.3 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது. இதில் 2000 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது. ஜியோபோனில் ஒற்றை சிம் கார்டுடன்,ஜியோ சிம் மற்றும் ஜியோ சேவைகள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version