ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் நிறுவனத்தின் மூதலீட்டை கொண்டு ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரில் தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கியது.

ஜியோ ஐபிஓ

அடுத்த ஆண்டு மத்தியில் அல்லது இறுதியில் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை மட்டும் தனியாக பிரித்து ஐபிஓ வாயிலாக வெளியிட ஜியோ தீவிரமாக விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்த செப்டம்பர் 2016 -யில் அதிகார்வப்பூர்வமாக சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் 4ஜி சார்ந்த சேவைகளில் அதிகப்படியான இலவசங்களை தொடர்ந்து வாரி வழங்கி 170 நாட்களில் 10 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்றிருந்த நிலையில், தற்போது கட்டண சேவையில் இயங்க தொடங்கியுள்ளது.

ஜியோ வருகைக்கு பின்னர் ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்த நநிலையில், டாடா மற்றும் ஆர்காம் ஆகிய இரு டெலிகோ நிறுவனங்களும் சந்தையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது.

கடந்த நிதி வருடத்தின் காலாண்டு முடிவில் ரூ.6,147 கோடி வரை வருமானத்தை ஈட்டியுள்ள ஜியோ நிறுவனம்,இந்த நிதி வருடத்தின் மூன்றாவது காலாண்டு முடிவில் முந்தைய காலண்டைவிட வருவாய் கூடுதலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ ஐபிஓ 2018 அல்லது 2019 ஆம் ஆண்டில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிறுவனம் தற்போது 14.6 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.