4ஜி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சாம்சங் நிறுவனமும் இணைந்து கேலக்ஸி எம் சீரிஸ் மொபைல்களுக்கு பிரத்தியேக விற்பனை மற்றும் டபுள் டேட்டா ஆஃபரை வழங்குகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மை ஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் மூலம் நாளை பிப்ரவரி 22ந் தேதி 12 மணி முதல் 1 மணி வரை விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதனை ஜியோவின் பிரத்தியேக பேணர் ஆப் மூலம் வழங்கப்பட்டு அதன் மூலம் மொபைல் போனை வாங்கலாம்.
ஜியோ – கேலக்ஸி எம் சீரிஸ்
கடந்த பிப்ரவரி 5ந் தேதி முதல் விற்பனை தொடங்கப்பட்ட எம் சீரிஸ் தொடர்ந்து ஃபிளாஷ் விற்பனை முறையில் அமேசான் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் ஜியோ மூலம் விற்பனை நாளை மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி M10
இன்ஃபினிட்டி V டிஸ்பிளேவை பெற்ற 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் TFT திரையுடன் , 720×1520 தீர்மானத்துடன், சாம்சங்கின் Exynos 7870 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என இருவிதமான மாறுபாட்டில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி என இருவகையான உள்ளடக்க சேமிப்பில் விற்பனைக்கு வரவுள்ளது.
கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கின்றது
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 10, மேலும் இந்த மொபைலில் 3,400mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.
சாம்சங்கின் கேலக்ஸி M10 மொபைல் போன் 2 GB உடன் 16 GB விலை ரூபாய் 7,990 மற்றும் கேலக்ஸி M10 3 GB உடன் 32 GB விலை ரூபாய் 8,990 என அமைந்திருக்கின்றது.
சாம்சங் கேலக்ஸி M20
இன்ஃபினிட்டி V டிஸ்பிளவினை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 மொபைல் போன், பெற்ற 6.3 இன்ச் ஹெச்டி+ திரையுடன் , 1080×2340 தீர்மானத்தை பெற்று, சாம்சங்கின் எக்ஸ்னோஸ் 7904 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என இருவிதமான 32ஜிபி மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி இடம்பெற்றிருக்கின்றது மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜ்ர் நுட்பத்தை பெற்றிருக்கும்.
சாம்சங்கின் கேலக்ஸி M20 மொபைல் போன் 3 GB உடன் 32 GB விலை ரூபாய் 10,990 மற்றும் கேலக்ஸி M20 4 GB உடன் 64 GB விலை ரூபாய் 12,990 என அமைந்திருக்கின்றது.
ஜியோ டபுள் டேட்டா ஆஃபர்
ஜியோ நிறுவனம் பிரத்தியேகாக அளிக்கின்ற கேலக்ஸி எம் சீரிஸ் போனில் உள்ள கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மொபைல்களுக்கு ரூ.3110 மதிப்புள்ள டேட்டா சலுகையை வழங்குகின்றது.
இந்த டேட்டா சலுகை பிப்ரவரி 5 ந் தேதி முதல் மே 5ந் தேதி 2019 வரை மொபைல் வாங்குகின்ற பயனாளர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
ஜியோ டபுள் டேட்டா சலுகை ஆஃபர், குறிப்பாக 10 ரீசார்ஜ் வவுச்சர்களில் மட்டும் வழங்கப்பட உள்ளது. அதாவது பிப்., 5ந் தேதி 2019 முதல் 30 ஜூன் 2020 வரை மட்டும் உள்ள காலத்தில் கிடைக்கும்.
டபுள் டேட்டா பெற குறைந்தபட்சம் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.198 மற்றும் ரூ. 299 பிளான்களில் மட்டும் கிடைக்கும்.
ஜியோ ரூ.198 பிளானில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்கள் வழங்கப்படுகின்றது. கேலக்ஸி எம் சீரிஸ் பயனர்களுக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஜியோ ரூ.299 பிளானில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்கள் வழங்கப்படுகின்றது. கேலக்ஸி எம் சீரிஸ் பயனர்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படும்.