இந்தியா முழுவதும் குறைந்த டேட்டா கட்டணத்தில் பொது வை-ஃபை சேவையை வழங்கும் வகையில் சில்லறை வணிகர்கள் வாயிலாக வழங்க மத்திய டெலிமாட்டிக்ஸ் வளர்ச்சி அமைப்பு திட்டமிட்டு வருகின்றது.

ஜியோவை வீழ்த்த தயாராகும் பெட்டிக்கடை வை-ஃபை சேவை

பொது வை-ஃபை

  • குறைந்தபட்ச ஆரம்ப விலை டேட்டா பேக் பத்து ரூபாயாக இருக்கும்.
  • பெட்டிக்கடைகளும் வை-ஃபை சேவை வழங்கும் மையங்களாக மாறும்.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தலாம்.

நாடு முழுவதும் இணைய சேவையை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை ஆய்வு செய்து வருகின்ற மத்திய டெலிமாட்டிக்ஸ் வளர்ச்சி அமைப்பு சில்லறை வணிகர்கள் வாயிலாக வை-ஃபை சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் வகையிலான திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி வருகின்றது.

ஜியோவை வீழ்த்த தயாராகும் பெட்டிக்கடை வை-ஃபை சேவை

பொது தரவு அலுவலகங்கள் (PDO-public data office) என்ற பெயரில் அறிமுகம் செய்ப்பட உள்ள இந்த வை-ஃபை சேவை சில்லறை வணிகர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் ரூ.50,000 விலைக்கு குறைவான செலவில் வைஃபை சேவைகளை வழங்குவதற்கு வைஃபை உபகரணங்களை நிறுவும் நோக்கில் இறக்குமதி வரி உட்பட பலவற்றை குறைத்து வழங்கவோ அல்லது நீக்கவோ டிராய் அமைப்பு பரிந்துரைக்கின்றது.

இதுபோன்ற சேவை தொடங்கப்படும் பொழுது குறைந்தபட்ச ஆரம்ப பிளான் கட்டணம் பத்து ரூபாய் அல்லது அதற்கு குறைவான விலையில் வழங்கப்படலாம்.

ஜியோவை வீழ்த்த தயாராகும் பெட்டிக்கடை வை-ஃபை சேவை

இதற்கான பிரத்யேக பில்லிங் அமைப்பை நிறுவி அதன் வாயிலாக வைஃபை அணுகலை பெற e-KYC அல்லது ஒடிபி (OTP – ஒரு முறை கடவுச்சொல்) அங்கீகாரத்தின் உதவியுடன் டேட்டா வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here