இனி., செட்டாப் பாக்ஸை மாற்றாமல் டிடிஎச் ஆப்ரேட்டரை மாற்றலாம்

புதிய டிடிஎச் நிறுவனங்களை மாற்ற நினைத்தால் , புதிய செட்டாப் பாக்ஸ் மாற்றமல் சேவை வழங்கும் நிறுனத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான (interoperability) சேவையை டிராய் இந்த வருட இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.

மொபைல் எண்களை மாற்றாமல் புதிய நெட்வொர்க் ஆப்ரேட்டர் முறைக்கு மாற வழி வகுக்கும் மொபைல் நம்பர் போர்ட்டெபிலிட்டி (MNP) போல செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மாற்ற இயலும்.

செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் டிடிஎச் சேவையை மாற்றலாம்

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சமீபத்தில் விருப்பமான டிவி சேனல்களை மட்டும் பெறும் வகையிலான டிடிஎச் , கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான விதிமுறையை வகுத்து வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக டிடிஎச் சேவையை மாற்றுவதற்கான பல்வேறு முறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதனால், ஒரே மாதிரியான திறந்தவெளி ஆதாரத்தின் மூலம் இதனை மேம்படுத்த முய்றிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.

திறந்தவெளி மென்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துவதனால், ஒரு நிறுவன சேவையிலிருந்து மற்ற நிறுவனத்தின் சேவைக்கு மாற்ற செட்டாப் பாக்ஸ் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது என டிராய் இயக்குநர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.