டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை காணலாம்

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2019 போட்டிகளை தொலைக்காட்சிகளில் இலவசமாக கண்டு மகிழ டாடா ஸ்கை ஏர்டெல் டிஜிட்டல் டிவி என இரு நிறுவனங்களும் ஐபிஎல் போட்டி முழுவதும் இலவமாக வழங்க உள்ளன.

நேற்றைக்கு சென்னையில் தொடங்கிய முதல் ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமான வெற்றி பெற்றுள்ளது.

இலவசமாக ஐபிஎல் 2019 போட்டிகளை காணலாம்

மிகப்பெரிய டிடிஎச் நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்கை நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 23 , 2019 முதல் மே 20, 2019 வரையிலான காலகட்டத்திற்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம், மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களா ஆகிய சேனங்களுக்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி இலவசாக அளிக்க உள்ளது.

டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை காணலாம்

டாடா ஸ்கை போல ஏர்டெல் டிஜிட்டல் டிவி டிடிஎச் நிறுவனமும், பழைய மற்றும் புதிதாக இணையும் பயனாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இலவசமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம், மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களா ஆகியவற்றை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.