மிக கடுமையான சவால்கள் நிறைந்த துறையாக மாறி வரும் தொலைத்தொடர்பு துறையிலிருந்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் வெளியேறுவதனால், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைகிறது.
டாடா டெலிசர்வீசஸ் – பார்தி ஏர்டெல்
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல், இந்தியாவின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா ஆகிய இரு நிறுவனங்களையும் ஏர்டெல் கையகப்படுத்த உள்ளதாக அதிகார்வப்பூர்வமான அறிக்கை வெளியாகியுள்ளது.
தொடர் இழப்பு, கடுமையான கடன் சுமை ஆகிய பிரச்சனைகளால் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் தற்போது ரூ.31,000 கோடி வரையிலான கடன் சுமையில் இந்நிறுவனம் சிக்கித் தவித்து வருகின்றது.
கடனில்லா-ரொக்கமில்லா அடிப்படையில் இணைப்பினை மேற்கொள்ளும் இந்நிறுவனங்களில் டாடா நிறுவனம் மொத்தம் 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் 2ஜி,3ஜி மற்றும் 4ஜி சேவை சார்ந்த சேவைகளில் உள்ள சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருக்கின்றது. இவர்களை அனைவரும் ஏர்டெல் பயனாளர்களாளக மாறுவார்கள்.
ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்குப் பின், நவம்பர் 1 முதல் இணைக்கப்பட உள்ள இந்த இணைப்பின் காரணமாக இந்நிறுவனத்தின் ரூ.31,000 கோடி கடன் டாடா நிறுவனத்தின் வசமே இருக்கும். அதேசமயம், அலை கற்றை ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையில், 20 சதவீதமான ரூ.9,000-ரூ.10,000 கோடியை பார்தி ஏர்டெல் அளிக்கும், எஞ்சிய 80 சதவீத தொகையை டாடா நிறுவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோவின் போட்டியை ஏதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.