mobile phone tower

இந்திய தொலைத்தொடர்பு துறை மிகப்பெரிய சவாலை கடந்த சில வருடங்களாக எதிர்கொண்டு வரும் நிலையில் 120 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்களை ஜனவரி 2019-ல் பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் 2018-ல் மொத்த தொலைத் தொடர்பு வாடிக்கையாளரின் எண்ணிக்கை 118 கோடியாக இருந்தது. குறிப்பாக ஜியோ நிறுவனம் 93 லட்சம் பயனாளர்களையும், பிஎஸ்என்எல் 9.3 லட்சம் பயனாளர்களை ஜனவரி மாதம் இணைத்துள்ளன.

இந்திய டெலிகாம் சந்தை

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாத முடிவில் டெலிகாம் பயனாளர்கள் எண்ணிக்கை 120 கோடியை கடந்துள்ளது. முன்பாக கடந்த ஜூலை 2017 மற்றும் மே 2018-ல் என இரு முறை 120 கோடி பயனாளர்களை கடந்தது குறிப்பிடதக்கதாகும்.

120 கோடி பயனாளர்களில் 118 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்கள் மொபைல் இணைப்பினையும், மற்றவர்கள் லேண்ட் லைன் சார்ந்த சேவையை பெறுபவர்களாகும்.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.4 கோடியாக உள்ளதாக, கடந்த ஜனவரி மாதம் மட்டும் 35.8 லட்சம் பயனாளர்களை இந்நிறுவனம் இழந்துள்ளது.

120 கோடி டெலிகாம் பயனாளர்கள், வோடபோன் ஐடியா தொடர் சரிவு - டிராய்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், கடந்த ஜனவரியில் 1 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து சுமார் 28.5 கோடி பயனாளர்களை பெற்றதாக உள்ளது. இதனை தொடர்ந்து 4ஜி சேவை மட்டும் வழங்கும் ஜியோ நிறுவனம் விளங்குகின்றது.

கடந்த ஜனவரி 2019-ல் சுமார் 93 லட்சம் பயனாளர்களை ஜியோ இணைத்து மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 29 கோடியை கடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், 9.82 லட்சம் புதிய பயனாளர்களை இணைத்து மொத்த எண்ணிக்கையை 11.53 கோடியாக உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை ஜியோ பெற வாய்ப்புள்ளது.

மொபைல் வழியாக இணையம் 98.63 சதவீதமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ 28 கோடி வாடிக்கையாளர்ளுடன் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும், வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.