இந்தியாவின் வீட்டு தொலைபேசி, அலைபேசி சேவைகளை உள்ளடக்கிய, ஒட்டுமொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 118 கோடியாக பிப்ரவரி 2017ல் உயர்ந்துள்ளது.

118 கோடியாக தொலைதொடர்பு சந்தாதாரர் உயர்வு  - பிப்ரவரி 2017

தொலைதொடர்பு சந்தாதாரர் – பிப்ரவரி 2017

  • 1.18 பில்லியன் தொலை தொடர்பு சந்தாதாரர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.
  • பிப்ரவரி மாதம் 13.8 மில்லியன் அலைபேசி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
  • வயர்வழி தொலைபேசி சேவை பெறுவோரின் எண்ணிக்கை 24.4 மில்லியன் ஆகும்.

கடந்த 2017 பிப்ரவரி மாத முடிவில் ஒட்டுமொத்த தொலைதொடர்பு சந்தாதாரர் 1.18 பில்லியன் தொட்டுள்ள நிலையில் முந்தைய ஜனவரி2017 மாதத்தை விட 1.2 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும்.

மெட்ரோ மற்றும் நகரபுறங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையில் 1.6 சதவீத வளர்ச்சி பெற்று 69.22 கோடியாக உயர்ந்துள்ளது.ஜனவரி மாத முடிவில் நகர்புற சந்தாதாரர் எண்ணிக்கை 68.12 கோடியாக இருந்தது.

கிராம்புறங்களில் தொலை தொடர்பு சேவையை பெறுவோர் எண்ணிக்கை ஜனவரி மாத முடிவில் 49.37 கோடியாக இருந்த நிலையில் மிக மெதுவான வளர்ச்சியாக 0.6 சதவீத வளர்ச்சி பெற்ற 49.64 கோடியாக பிப்ரவரியில் உயர்ந்துள்ளது.

118 கோடியாக தொலைதொடர்பு சந்தாதாரர் உயர்வு  - பிப்ரவரி 2017

ஜியோ வருகையினால் சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் தொலைதொடர்பு நிறுவனங்கள் எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக விளங்குவதனால் தொலை தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

உலகயளவில் அதிக தொலை தொடர்பு சந்தாதாரர் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது குறிப்பிடதக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here