ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரிப்பு

கடந்த 7 வாரத்திற்க்குள் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரம் மூலம் ஃபேஸ்புக் துவங்கி 10 நிறுவனங்கள் சுமார் ரூ.104,326.95 கோடியை முதலீடு செய்து 22.38 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளன.

நேற்றைக்கு ஜியோவின் பிளாட்ஃபாரத்தில் டி.பி.ஜி என்ற நிறுவனம் ரூ.4,546.80 கோடியை முதலீடு செய்து 0.93 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது. இதனை தொடர்ந்து எல் கேட்டர்டான் என்ற நிறுவனம் ரூ.1,894.50 கோடியை 0.39 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ஜியோ பிளாட்ஃபாரத்தில் இதுவரை 10 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனம் அதிகபட்சமாக 9.99 சதவீத பங்குகளில் ரூ.45,378 கோடியை முதலீடு செய்த நிலையில், அதன்பிறகு சில்வர் லேக், விஸ்டா, கேகேஆர், ஜென்ரல் அட்லான்டிகா, முப்தாலா போன்றவற்றுடன் அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி ஆகியவை முதலீடு செய்துள்ளன. இதனை தொடர்ந்து கூடுதலாக சில நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபாரத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரிப்பு