jio

டிராய் அமைப்பு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடிப்படையான விலையை (Floor Price) உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதாவது, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு குறைந்தபட்ச கட்டண முறையை அமல்படுத வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில், தற்போது டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு எவ்விதமான அடிப்படை கட்டண முறையும் இல்லாமல் டெலிகாம் நிறுவனங்களே நிர்ணயித்து வரும் நிலையில், ஒரு வேளை அடிப்படை கட்டணத்தை கொண்டு வந்தால் ஜியோ உட்பட ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கட்டணங்கள் ஒரே மாதிரியாக அமைய வாய்ப்புள்ளது.

எனவே, இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் டிராய் ஜனவரி17, 2020 வரை அடிப்படை விலை குறித்தான கருத்துகளையும், எதிர் கருத்துகளை ஜனவரி 31, 2020 வரை கோரியுள்ளது.

சமீபத்தில், டிராய் மற்ற நெட்வொர்கக் இடையே ஏற்படுத்தப்படும் அழைப்புகளுக்கு ஐ.யூ.சி கட்டணத்தை டிசம்பர் 31, 2020 வரை நீட்டித்துள்ளது. எனவே, மற்ற நெட்வொர்க் அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 6 பைசாவாக இருக்கும்.