டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம், விருப்பமான டிவி சேனல்களை தேர்வு செய்ய பிரத்தியேக ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முகவரியில் ஒவ்வொரு டிவி சேனல்களின் கட்டண விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

சேனல் செலக்டர்

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள, புதிய சேனல் செலக்டர் வலைதள பக்கத்தில், ஒவ்வொரு பிரிவுகளின் வாயிலாக தேர்வு செய்து ஒவ்வொரு சேனலுக்கு வசூலிக்கப்படுகின்ற கட்டணத்தை அறிந்து கொள்ளலாம்.

https://channel.trai.gov.in  என்ற முகவரியில் சென்றால் கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று காணலாம்.

டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்

சேனல் செலக்டர் பிரிவில் மாநிலத்தை தேர்வு செய்து தமிழ்நாடு என கொடுத்தால் தமிழ் சேனல்கள் அனைத்தும் ஹெச்டி மற்றும் எஸ்டி வகையில் பெறலாம்.

டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்

பிரத்யேக வலைதளத்தில் பக்கத்தில் உள்ள பெயர் , மாநிலம் , மொழி சேனல் மற்றும் பிரிவுகளை தேர்வு செய்து கடந்தால் ஐந்து வழிமுறைகளை , அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான ஒவ்வொரு கட்டண விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.
விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
புதிய விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.