டிராய் அறிவித்துள்ள கேபிள் டிவி, டிடிஎச் பயனர்கள் புதிய கட்டண விதிமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்த நிலையில், பயனாளர்கள் நலன் கருதி, தற்போது புதிய கட்டண விதிமுறை அமல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவி

கட்டண சேனல்கள் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் ( டிராய் ) வகுத்துள்ள புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான கால அவகாசம், தற்போதது மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்தப் புதிய கட்டண விதிமுறைகள் குறித்து ட்ராய், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் டிடிஎச் வழங்குநர்களிடம் நடத்திய ஆலோசனையில், கேபிள் டிவி சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

புதிய விதிமுறையின்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் ‌40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. மொத்தமாக உள்ள 17 கோடி கேபிள் டிவி வாடிக்கையாளார்களில் இதுவரை 9 கோடி பேர் டிராயின் புதிய விதிமுறைகளுக்கு மாறியிருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே, பயனாளர்கள் இணைவதற்கான காலம், மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்குவதாக டிராய் அறிவித்துள்ளது.