aircel

தமிழகத்தின் மிகப்பெரிய ஏர்செல் நெட்வொர்க் திவாலானதை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களை மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போர்ட் செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், சில போர்ட் செய்யாத பயனாளர்களுக்கு இறுதியாக அக்டோபர் 31, 2019 வரை இந்த வாய்ப்பினை டிராய் ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியடைந்த தொலைத்தொடர்பு துறையில் ஏர்செல் நிறுவனம் 9 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களுடன் திவாலான சமயத்தில் மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்ய தனது இணையதளத்தின் வாயிலாக வாய்ப்பினை வழங்கியது.

இன்று, டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு எம்.என்.பி போர்ட் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மும்பை, வடகிழக்கு, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ஏர்செல் மற்றும் டிஷ்நெட் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 31, 2019 க்குள் ஏர்செல்லிலிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.

மொபைல் எண் போர்ட்டிங்கிற்கு யுபிசி உருவாக்குவது எப்படி?

ஏர்செல் சேவைகளை மூடுவதாக அறிவித்தபோது, சந்தாதாரர்கள் அதன் வலைத்தளத்தின் மூலம் யுனிக் போர்ட்டிங் கோட் (யுபிசி) உருவாக்க அனுமதித்தனர். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் எம்.என்.பி. இருப்பினும், வலைத்தளம் இனி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஏர்செல் சிம் கார்டு கொண்ட வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்தால், நெட்வொர்க் சேவையை மேனுவல் ஆக தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏர்டெல் 2 ஜி அல்லது 3 ஜி நெட்வொர்க்கில் இணைக்கலாம். ஏர்டெல் நெட்வொர்க் உடனடியாக உங்களுக்கு கிடைத்து விடும்.

உங்கள் மொபைல் போன் நெட்வொர்க் சிக்னலைக் காட்டியதும், மெசேஜிங் மூலம், 1900 என்ற எண்ணுக்கு PORT (ஏர்செல் மொபைல் எண்) பைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பிய உடன், தனித்துவமான போர்ட்டிங் குறியீடு வருவதற்கு சில நிமிடங்களில் கிடைக்கும். யுபிசி எண்ணை பெற்ற பிறகு, அருகிலுள்ள தொலைத் தொடர்பு ஆபரேட்டர் மூலம் மற்றும் நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.