இன்டர்நெட் காலிங் சேவைக்கு புதிய விதிமுறைகள் - டிராய்

சமீபத்தில் டிடிஎச் , கேபிள் டிவி சேவைகளுக்கு கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததை போல ஓவர்-தி-டாப் (OTT) சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயற்படுத்த உள்ளதாக டிராய்  தலைவர் ஆர்.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 அரங்கில் பேசிய டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில், OTT சேவைகளுக்கான புதிய திட்டங்களுக்கான மாதிரி இப்போது தயார் நிலையில் எங்களிடம் உள்ளது. விரைவில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளுடன் உங்களைச் சந்திக்க உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

உலக மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் 5ஜி தொழில்நுட்பத்தால் எந்த மாதிரி சேவைகள் மாறும் என எடுத்துக்காட்டி வருகிறது. மேலும் OTT குறித்த இந்தப் புதிய விதிமுறைகள் இன்டர்நெட் காலிங், மெசேஜிங் போன்றவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராய் அறிவித்த டிடிஎச் மற்றும் கேபிள் டிவி தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும், இதனை டிராய் உறுதியாக செயற்படுத்தி வருகின்றது. புதிய விதிமுறைகளைப் பின்பற்ற மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சேனல்களை தேர்வு செய்ய Trai Channel Selector App User Guideline என்ற இந்த அப்ளிகேசன் டிராய் செயற்படுத்தி வருகின்றது.